.
கண்ணனோடு
ஒரு கலந்தாலோசனை!
இங்கே
மத்ராவில் என்ன நடந்தது என்று பார்ப்போமா? ப்ருஹத்பாலன் மிகவும் சமயோசிதமாகத் தனக்கு
அளிக்கப்பட்ட யுவராஜா பதவியை மறுதலித்து விட்டான் என்பது உக்ரசேனர் மூலம் கண்ணனுக்குத்
தெரிவிக்கப் பட்டது. யாதவத் தலைவர்களில் பலரும்
உக்ரசேனரிடம் கிருஷ்ணன் யுவராஜா ஆவதற்குத் தங்கள் விருப்பத்தை முழுமனதோடு தெரிவித்தனர். இதன் மூலம் யாதவர்கள் குல கௌரவம் உயரும் என்றும்
யாதவர்களின் வலிமை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்த்தனர். ஜராசந்தனுக்கு உள்ள கர்வம், பீஷ்மகனின் அகங்காரத்தைக்
கண்ணன் ஒருவனாலேயே ஒடுக்க முடியும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு. ஆனால் கிருஷ்ணன் பணிவோடு அவர்களை மறுத்தான். ‘பெரியோர்கள் அனைவரும் என்னிடம் வைத்திருக்கும்
நம்பிக்கைக்கும், ஆதரவுக்கும் நன்றி செலுத்துகிறேன். நம்முடைய கௌரவம் அதற்காக நாம் நம் உயிரை விடும்போது
தான் நிலைநிறுத்தப்படும். நம்மிடம் ஆயுதங்கள்
உள்ளன. குதிரைகள், கணக்கற்ற ரதங்கள்! நம்மால்
ஒரு ரதப்போட்டியை நடத்தும் அளவுக்கு உறுதி கூட இல்லை. நம் நண்பர்கள் இதை ஓர் அற்ப விஷயமாகக் கருதுகின்றனர். நம்மால் ஒரு
ரதப் போட்டியைக் கூட நடத்த முடியவில்லை எனில், நம் குதிரைகளை அந்த வேகத்துக்குப்
பழக்கவில்லை எனில், எப்படி நம்மால் போஜர்கள், சேதி நாட்டவர்கள், மகதர்கள் ஆகியோருடன்
போரிட்டு வென்று நம் கௌரவத்தை நிலை நாட்ட இயலும்? நம் வலிமையே இங்கே கணக்கெடுக்கப்படுமே
அன்றி போரில் பங்கெடுப்பதில் இல்லை.”
“நாம்
அனைவரும் போர் புரியத் தயாராகவே இருக்கிறோம்.
நீ தலைமை தாங்கிச் செல்.” சாத்யகி சொன்னான். “முதலில் என்ன செய்யவேண்டுமோ அதைத்
தான் செய்ய வேண்டும். நீ மட்டும் என்னுடன்
இந்த ரதப் போட்டிக்குத் தயாராக ஆகிவிடு. இது
மட்டும் நடந்தால் இந்த ஆர்யவர்த்தமே யாதவ குலத்தைத் திரும்பிப் பார்க்கும். “ கண்ணன்
பதில் கூறினான். “ஆனால் நாம் இதன் மூலம் அவமானத்தையும்
சகித்துக்கொள்ள வேண்டி இருக்கும்.” சாத்யகி கூறக் கண்ணனோ, “எந்த அவமானமும் ஏற்படப்
போவதில்லை. இதை நாம் ஒதுக்கினோமெனில் ஏற்படலாம்.”
என்று கூறினான்.
“கண்ணா,
நீ குண்டினாபுரத்தில் நடைபெறப்போகும் போலி சுயம்வரத்தை உடைத்தெறிந்துவிட்டு, இளவரசி
ருக்மிணியைத் தூக்கி வந்துவிடு. அது தான் சரியானது.”
என்று அப்போது அனைவரிலும் மூத்தவன் ஆன கடன் கூறினான். அதற்குக் கண்ணன், “பாட்டனாரே,
போலி சுயம்வரம் எவ்வளவு அபகீர்த்தியை விளைவிக்குமோ அதற்கு ஈடானது இஷ்டமில்லாத பெண்ணைத்
தூக்கி வருவதும். ஆனால் இளவரசிகள் இளவரசர்களையோ அல்லது அரசர்களையோ தான் மணக்கவேண்டும்
என்னும் விதி இருப்பதை மறவாதீர்கள்.” என்றான்.”பாட்டனாரே, என் மீது உமக்கு நம்பிக்கை
இருந்தால் இந்த ரதப்போட்டியை நான் நடத்துவதற்கு எனக்கு உதவுங்கள். நம் எதிரிகளின் கண்களைத் திறந்து விட்டு நம் வலிமையை
அவர்களுக்கு உணர்த்தும். என் கைவசம் உடனடியாகக்
காத்திருக்கும் வேலையைச் சரிவரச் செய்து அதன் மூலம் நான் கௌரவத்தைத் தேடிக்கொள்ள விழைகிறேன். காத்திருக்க வேண்டியவற்றில் கவனம் செலுத்துவதில்
இல்லை. “ என்று கண்ணன் உறுதியாகச் சொன்னான்.
“உன்னிடம்
எங்கள் அனைவருக்கும் மிகுந்த நம்பிக்கை உள்ளது கோவிந்தா!” என்று அக்ரூரர் கனிவுடன்
கூறினார். “எது சரியெனத் தோன்றுகிறதோ அதைச்
செய் கண்ணா!” என்ற உக்ரசேனர் சாத்யகி பக்கம் திரும்பி, “நீ மிகுந்த ஊக்கத்துடனும்,
ஆர்வத்துடனும் இருக்கிறாய். உன் வீரமும் நான்
அறிந்ததே. அதைக் காட்டுவதற்குக் காத்திருக்கும்
பொறுமை இல்லாதிருக்கிறாய். நம்பிக்கையுடன் காத்திரு; கிருஷ்ணன் ஒருவனால் தான் நமக்குத் தலைமை வகித்து
நடத்திச் செல்ல இயலும்.” என்றான்.
“ஆம்,
ஆம், அதில் சந்தேகமே இல்லை. நிச்சயமாய்க் கண்ணன் வழிநடத்துவான்.” என வழிமொழிந்தார்
அக்ரூரர்.
“சரி,
ஐயா, நாங்கள் இப்போது மிகவும் குழப்பத்தில் இருக்கிறோம். கிருஷ்ணன் எப்படி எல்லாவற்றையும் பார்க்கிறான்;
புரிந்து கொள்கிறான் என்பது எங்களுக்கு விளங்கவில்லை. ஆனால் அவன் சொல்படி கேட்கக் காத்திருக்கிறோம். ரதப் போட்டியை வெற்றியடையச் செய்கிறோம்.” என்றான்
சாத்யகி.
அனைவரும்
கலைந்து சென்றதும் விராடனும், சாத்யகியும் கண்ணனைச் சந்தித்தனர். “வாசுதேவா, ப்ருஹத்பாலனுடனான உறவை முறித்துக் கொண்டு
நீயே கதி என வந்து இருக்கிறோம் நாங்கள். உன்னுடன் பணி புரியக் காத்திருக்கிறோம்.” என்றான்
சாத்யகி. “ம்ம்ம்ம் ஆனால் இது ப்ருஹத்பாலனுக்கு நீங்கள் செய்யும் துரோகம்.” என்றான்
கண்ணன். “ஓ, ஓ, கண்ணா, தவறு எங்களுடையதே அல்ல. அவன் கோழைத்தனமாக நடந்து கொள்கிறான். அவனுக்கு எங்களுக்குத்
தலைமை தாங்கி வெற்றியை நோக்கி நடத்திச் செல்லும் திறமை அறவே இல்லை.” என்றான் சாத்யகி. “எப்படியோ, அவன் புத்திசாலி தான். ஏனெனில் நாம் இப்போது சரிவர ஒருங்கிணைக்கப்பட்டு
இல்லை. நாம் அனைவருமே சிதறி இருக்கிறோம். இப்படியானவர்களைக் கொண்டு எந்த வெற்றியை ப்ருஹத்பாலனால்
அளிக்க இயலும்? நமக்கு வெற்றியும் வேண்டும்.
ஆனால் அதற்கான விலையை நாம் கொடுக்கவும் மாட்டோம்.” என்றான் கண்ணன். “எப்படிப் பட்ட விலையைக் கொடுக்க வேண்டும் கண்ணா?”
விராடன் கேட்டான்.
9 comments:
Is it repost?. we are awaiting for kannan marriage. Please write it fast.
ஹாஹா, பித்தனின் வாக்கு, இப்போத் தான் புரியுது, ஏதோ தப்பா வந்திருக்கு, ஒரே நாளில் இரண்டு முறை பப்ளிஷ் ஆயிருக்கு! :)))))
இந்த அத்தியாயம் ஒண்ணுமே புரியலை ;சரி பின்னொரு நாளில் படிப்போம் !
இந்த அத்தியாயம் எங்கே இரண்டு முறை பப்ளிஷ் ஆயிருக்கு என்று தெரிவுக்கும் படி கேட்டு கொள்கிறேன் Geethaa maa
அதான் தெரியலை ப்ரியா, பித்தனின் வாக்கு எடுத்துக் காட்டியதும் இரண்டு முறை பப்ளிஷ் ஆகி இருப்பதைக்கவனித்து ஒன்றை நீக்கினேன். இப்போப் பதிவையே காணோம். இந்தக்குறிப்பிட்ட பதிவின் வேர்ட் டாகுமென்ட் இந்தியாவிலே இருக்கு. அங்கே போனதும் தான் சரி செய்ய இயலும். :((((((
இங்கே கண்ணன் ஒருவனே எல்லாமும் ;
நான் சிஷ்யை மட்டுமே :)
அதனால் என்ன கீதாமா
பொறுத்தார் பூமி ஆழ்வார் :)
"கண்ணனுக்காக: கண்ணனோடு ஒரு கலந்தாலோசனை! பதிவு தெரியவில்லையம்மா ! தயவு செய்து இந்த பதிவை திருப்பி போடவும்.
என்னனு புரியலை, பார்க்கிறேன், சித்ரா, கொஞ்சம் பொறுக்கவும். நன்றி.
Post a Comment