சென்ற அத்தியாயத்துடன் மூன்றாம் பாகம் முடிவடைந்தது. பின்னுரையில் சத்யவதியின் கருத்துக்களைக் கேட்டதோடு முடிவடைந்திருக்கிறது. நான்காம் பாகம் சத்யபாமாவின் கதை எனத் தவறாகப் பார்த்து இருக்கிறேன். அது ஐந்தாம் பாகம். நான்காம் பாகமும் ஐந்து சகோதரர்களின் திருமண வாழ்க்கை குறித்தும் கௌரவர்களை அவர்கள் சந்திக்கையில் ஏற்படும் விளைவுகளுமே வரும். இவற்றில் பீமன் முக்கிய பங்கு வகிப்பான். வழக்கம் போல் கண்ணனும் வருவான். கண்ணன் இல்லாமல் கதையா? அனைவரும் ஆதரவு தருமாறு வேண்டுகிறேன். நன்றி வணக்கம். திரு கே.எம். முன்ஷி அவர்கள் எழுதியது என்பதை நினைவில் கொண்டு அனைவரும் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கூடியவரையில் அவர் சொல்லி இருக்கும் தர்க்கரீதியான எண்ணங்களை இந்தத் தொகுப்புக்களின் மூலம் கொண்டு வர முயன்றிருக்கிறேன். ஆங்காங்கே தேவையான இடங்களில் சில சேர்க்கைகள், வர்ணனைகள் என்னால் சேர்க்கப்பட்டிருக்கும். கர்ணனின் முன் கதை, ஜராசந்தனின் கதை, திரௌபதியின் கதை போன்றவை அதில் அடக்கம். இனி நான்காம்பாகம் தொடரும்.
No comments:
Post a Comment