எல்லோரும் எதிர்பார்க்கிறாப்போல் திரௌபதியின் திருமண நிகழ்வுகளை நம்மால் காண முடியாது. சென்ற அத்தியாயத்துடன் மூன்றாம் பாகம் முடிவடைந்து விட்டது. நான்காம் பாகம் தொடரும் முன்னர் துரோணர், துரியோதனன் ஆகியோர் இருவருக்கும் இந்தத் திருமணச் செய்தி ஏற்படுத்திய விளைவுகளைச் சுருக்கமாய்க் காண்போம். கூடவே திரௌபதியின் முன் பிறவியும், அவள் பெற்ற வரமும் அவள் ஏன் ஐவரைத் திருமணம் செய்து கொள்ள நேர்ந்தது என்பதையும் சுருக்கமாய்ப் பார்ப்போம். நான்காம் பாகமும் கண்ணனின் கதை தான். இது முழுக்க முழுக்கக் கண்ணன் எவ்வாறு தர்க்கரீதியாக அனைத்து சாகசங்களையும் செய்ய முடிந்தது என்பது தான். கண்ணனைக் குறித்த கதைகள் மட்டுமே. நான்காம் பாகத்தில் சத்யபாமா கண்ணனை எவ்வாறு அடைகிறாள் என்பதையும் கூடவே மற்ற விபரங்களையும் பார்ப்போம். அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டுகிறேன். படித்துக் கருத்துப் பகிர்பவர்களுக்கும், படித்துவிட்டுக் கருத்துச் சொல்லாமல் இருப்பவர்களுக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
இந்தப் பக்கமே கண்ணனுக்காக மட்டும் தான்! ஆகையால் கண்ணன் குறித்த செய்திகளே இடம் பெறும். நன்றி.
இந்தப் பக்கமே கண்ணனுக்காக மட்டும் தான்! ஆகையால் கண்ணன் குறித்த செய்திகளே இடம் பெறும். நன்றி.
2 comments:
ம்ம்ம்ம்....
ள்...
கள்...
ங்கள்...
ருங்கள்...
டருங்கள்...
தொடருங்கள்...!
(எங்கேயோ பார்த்த மாதிரி இல்லை?)
ம்ஹூம் இல்லை! தப்பு!
தொடருங்கள்
டருங்கள்
ருங்கள்
ங்கள்
கள்
ள்ள்ள்ள்ள்ள் இப்படில்ல வரணும். இதான் எதிரொலி. நீங்க சொல்லி இருப்பது புதிரொலி! :)))
Post a Comment