நாம் படித்து வருவது முன்ஷிஜியின் கிருஷ்ணாவதாரம் தொடர்கள். ஆகவே அவர் எழுதியிருப்பதைத் தான் நான் அப்படியே தருகிறேன். நடுநடுவே ஆங்காங்கே ஒரு சில கருத்துகளோ ஒரு சில புராணக்கதைகளோ அல்லது ஒரு சிலரின் முன் கதைகளோ தேவையை ஒட்டித் தந்தாலும் என்னுடைய எழுத்து என்பது மொழிபெயர்ப்போடு முடிகிறது. ஆகவே இங்கே பரசுராமருக்கும் பீஷ்மருக்கும் குரு--க்ஷாத்ரா யுத்தம் நடந்ததை (அதனால் தான் தர்ம க்ஷேத்திரம் குரு க்ஷேத்திரம் என அழைக்கப்பட்டதாகவும் ஒரு கூற்று) இங்கே விவரிக்கவில்லை.
பரசுராமர் அம்பாவுக்கு உதவி செய்வதற்காக பீஷ்மருடன் தர்மக்ஷேத்திரத்தில் யுத்தம் செய்கிறார். இப்படி குருவுக்கும் அவர் மாணவனான க்ஷாத்திரனுக்கும் (க்ஷத்திரியன்) நடந்த யுத்தம் 23 நாட்கள் நடந்ததாகத் தெரிந்து கொள்கிறோம். இந்த யுத்தத்தில் பரசுராமரை வெல்ல முடியாத பீஷ்மர் கடைசியில் நித்திரா அஸ்திரத்தை ஏவி அவரைத் தூங்கச் செய்ததாக ஒரு கூற்று. இன்னும் சிலர் பரசுராமர் பீஷ்மரை வெல்ல முடியாமல் தோற்றார் என்றும் சொல்கின்றனர். இதைக் குறித்து நம் முன்ஷிஜி அவர்கள் விரிவாகச் சொல்லவில்லை. மேலும் இந்தப் புத்தகம் வேத வியாசரைக் குறித்தது. அவருடைய பண்புகள், குணநலன்கள், பெற்ற வெற்றிகள், செய்த சேவைகள் என்றே நாம் பார்த்து வருகிறோம்; இனியும் பார்க்கப் போகிறோம்.
அதனால் பீஷ்மர், பரசுராமர் யுத்தம் குறித்த தகவல்களைத் தெரிந்து கொண்டு நாம் இனி மேலே த்வைபாயனருடனே பயணிப்போம். ஒரு சிலர் தனி மடல்களிலும், ஶ்ரீராம் பின்னூட்டத்திலும் கேட்டிருப்பதால் இந்த விளக்கம் கொடுக்க வேண்டி வந்தது. மேலும் நாம் படிப்பதும் சரி, நான் எழுதி வருவதும் சரி, கிருஷ்ணாவதாரக் கதைகளே. முழு பாரதம் அல்ல! :)

2 comments:
அருமை, இனிதான் கதை ஆராம்பிக்கின்றது. தொடருங்கள் காத்து இருக்கின்றோம்.
இந்தப் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன்.
Post a Comment