Thursday, August 5, 2010

கண்ணனுக்காக இந்தப் புதிய பக்கத்தை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம்!

விநாயகர் துணை! விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லோன், விநாயகனே நீ தான் காப்பாற்றணும்!



நண்பர்களுக்கு ,
அனைவருக்கும் வணக்கம். அப்படி ஒண்ணும் பெரிசா எழுதறதில்லை.இரண்டு நாட்கள் முன்னாலே தான் தினசரிகளில் கூகிள் தனியாரின் வலைப்பக்கங்களை திடீரென மூடுவது குறித்துப் படிச்சேன். அப்போக் கூட எனக்கே இது வந்து சேரும்னு நினைக்கவே இல்லை. ஏனென்றால் நான் யாரையும் தாக்கியும் எழுதறதில்லை. தனிப்பட்ட நபரைக் குறித்தும் எதுவும் எழுதறதில்லை. யாரோடயும் சண்டை போட்டதில்லை. அந்தச் செய்தியில் சில நபர்களின் தனிப்பட்ட தாக்குதல்களைக் கண்டே மூடினதாய்க் கூறி இருந்தது. ஆனால் நான் பல பதிவுகளுக்கும் போனது கூட இல்லையே! எந்தவிதமான பிரச்னைகளும் நடப்பது தெரியாது. நான் பாட்டுக்கு ஏதோ எழுதிட்டு இருக்கேன். ஏன் இப்படி அடுத்தடுத்து சோதனை? ஒண்ணுமே புரியலை. கண்ணன் தொடரை முடிந்த வரைக்கும் பாக் அப் எடுக்க முயற்சி செய்யறேன். எந்த அளவுக்கு அதிலே வெற்றி கிடைக்கும்னு தெரியலை. போனது போகட்டும். இனி நடப்பவை நல்லதாக இருக்கப் பிரார்த்தனைகளுடன், விநாயகர் கிருபையில் அனைத்தும் இனி சரியாகவும் வேண்டுகிறேன். மற்ற சிநேகிதர்களும் சிநேகிதிகளும் கவனமாக இருக்கவும் பிரார்த்திக்கிறேன்.

11 comments:

எல் கே said...

மாமி என்ன ஆச்சு ?? உங்க ப்ளாக் மூட முடியாது ? ஏன் ??

மற்றப் படி இந்த வலைப்பூவை வரவேற்கிறேன்

sambasivam6geetha said...

ஏன் மூட முடியாது?? திறக்கவே இல்லை, அப்புறம் எங்கே மூடறது??

sambasivam6geetha said...

comments box nalaikku sari pannaren.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

மாமி என்ன ஆச்சு? இப்படி எல்லாம் கூட செய்வாங்களா? ப்ளாக் எல்லாம் அப்படி க்ளோஸ் பண்ண முடியுமா? என்ன இது?

சரி.. கண்ணனுக்கு தனி பக்கம் ஆரம்பிக்கணும்னு இருக்கு போல... வாழ்த்துக்கள் மாமி... தொடர்ந்து வருவேன்... நன்றி

வல்லிசிம்ஹன் said...

kannanukke kannanukkunnu thani blog. good idea.
but why is this happening.

பித்தனின் வாக்கு said...

ellam nanmaikke

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

மாமி - உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன்... தலைப்பு "கடவுளும் நானும்"

http://appavithangamani.blogspot.com/2010/08/blog-post_06.html

priya.r said...

முதலில் கண்ணன் ப்ளோகுக்கு எனது வாழ்த்துக்கள் .
கவலைப்பட வேண்டாம் கீதாம்மா ;
கணேச மூர்த்தியும் கிருஷ்ண மூர்த்தியும் இருக்க கவலை ஏன் கீதாம்மா
தங்களின் எழுத்து பனி தொடர கிருஷ்ணரை நானும் வேண்டி கொள்கிறேன்மா

Indira said...

unga indha blog nala iruku..ana idanoda mudhal pakatha share pandrengala...madam

sambasivam6geetha said...

இந்திரா, முதல் வரவுக்கு நன்றி. சீக்கிரம் முதல் பாகம் எழுதிய வலைப்பக்கத்தின் சுட்டியை இங்கே சேர்க்கிறேன். நன்றி வருகைக்கும், பாராட்டுக்கும்.

கதம்ப உணர்வுகள் said...

க்ருஷ்ணார்ப்பணம் !!!