பலருக்கும் பிரத்யும்னனின் இந்த நடவடிக்கைகள் புதிராகவும், புதிதாகவும் ஏற்க முடியாமலும் ஜீரணிக்க முடியாமலும் இருக்கலாம். ஆனால் திரு முன்ஷிஜி அவர்கள் இப்படித் தான் எழுதி இருக்கிறார். மேலும் இது இன்னமும் 2 அல்லது 3 அத்தியாயங்களில் முடிந்தும் விடும். அதன் பின்னர் எப்படித் தொடர நினைத்தார் என்பதற்கான குறிப்புகள் இல்லை. ஆனால் நான் தொடர்ந்து எழுதிக் குருக்ஷேத்திரப் போர் மற்றும் அதன் பின் விளைவுகள் குறித்தும் எழுதி நிறைவு செய்யலாம் என நினைக்கிறேன். இது குறித்து அனைவர் கருத்தையும் அறிய விரும்புகிறேன். ஆனால் இத்தனை நாட்கள் எழுதியது வேறு. இனி நான் எழுதப் போவது மஹாபாரதம் மற்றும் பாகவதத்தில் உள்ளவை மட்டுமே! ஆகவே வேறுபாடுகள் நிச்சயமாய்த் தெரியும். உங்கள் கருத்தை அறிந்து மேலே தொடருவேன்.
5 comments:
உள்ளது உள்ளபடியே சொன்னால்தானே எங்களுக்கும் அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரியும்? தொடரலாம்.
ஹிஹிஹி, சரியாச் சொல்லலையோ! அவர் சொன்னதை அப்படியே எழுதிடுவேன். அது இன்னும் ஒரு வாரம் அதிகம் போனால் பத்து நாளில் முடிஞ்சுடும். அதுக்கப்புறமாத் தான் தொடரலாமா, என்னோட விவரணையில் என்று கேட்டிருக்கேன். :)
தொடருங்கள்.
dear madam
namasthe
i have been reading this regularly
i wish you should continue
with sincere regards
r radhakrishnan
கண்டிப்பாக தொடருங்கள். முன்ஷியின் பல தகவல்கள் எங்களுக்கு புதியவை. ஆகையால் போர்க்கள காட்சிகளிலும் அவர் என்ன சொல்லியிருக்கார் என்று அறிய ஆவா.
Post a Comment